விஜய் பட நடிகை வீட்டிற்கு அடிக்கடி செல்லும் கமல்!.. காரணம் என்ன தெரியுமா?
Kamal Haasan
Andrea Jeremiah
By Dhiviyarajan
பாடகி, நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என ஆல்ரவுண்டராக இருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் "பச்சைக்கிளி முத்துச்சரம்" என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தற்போது ஆண்ட்ரியா வித்தியாசமான கதை அம்சங்களில் மும்முரமாக நடித்து வருகிறார்.
ஆண்ட்ரியா நடிகர் உலக நாயகன் கமல் ஹாசனுடன் சேர்ந்து உத்தம வில்லன், விஸ்வரூபம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த படங்களில் ஆண்ட்ரியா வெளிப்படுத்திய நடிப்பு மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இதையடுத்து கமல் ஆண்ட்ரியா வீட்டிற்கு சென்று புதிய படங்களில் நடிக்கும் படி அறிவுரை கூறினாராம்.