வீண் செலவு செய்யும் கமல்.. அந்த விஷயத்துக்கு இத்தனை லட்சம் கொடுத்தாரா?
கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக இருக்கிறார். வழக்கமான கமல் படங்களுக்கு வரும் எதிர்பார்ப்பை விட விக்ரம் படத்திற்கு பல மடங்கு எதிர்பார்ப்பு கூட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் காரணம்.
தற்போது பல விதங்களில் விக்ரம் படத்தை ப்ரோமோஷன் செய்து வருகிறார் கமல். ரயிலில் படத்தின் போஸ்டர் வரைத்து விளம்பரம், perfume உள்ளிட்ட பொருட்களில் விக்ரம் branding செய்து விற்பது என பல விஷயங்களை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று கமல் துபாயில் மிக உயரமான Burj Khalifa கட்டிடத்தின் மீது விக்ரம் பட ட்ரைலரை ஒளிபரப்ப வைத்திருக்கிறார். அதன் வீடியோவும் நேற்று வெளியாகி இருந்தது.
சில நிமிடங்கள் மட்டுமே வீடியோ ஒளிபரப்பப்பட்டது, ஆனால் அதற்காக கமல் செய்த செலவு மிகப்பெரியது.
Burj Khalifa கட்டிடத்தில் வீடியோ ஒளிபரப்ப 3 நிமிடத்திற்கு சுமார் 53 லட்சம் இந்திய ரூபாய் தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வீண் செலவு செய்கிறாரே கமல் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.