கமல் ஹாசனுக்கு இந்த நிலைமையா! பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான வசூலில் தக் லைஃப்
படம் நாயகன் படத்திற்குப்பின் 38 ஆண்டுகள் கழித்து கமல் - மணி ரத்னம் இணைகிறார்கள் என்பதால், தக் லைஃப் படத்தின்மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.
மேலும் சிம்புவும் முதல் முறையாக இப்படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கிறார் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. இதுமட்டுமின்றி த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வசூல்
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்த இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. முதல் நாளில் இப்படத்திற்கு உலகளவில் நல்ல வசூல் கிடைத்தாலும், அதன்பின் மோசமான சரிவை பாக்ஸ் ஆபிஸில் சந்தித்தது.
இந்த நிலையில், 7 நாட்கள் அதாவது ஒரு வாரத்தை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் கமல் ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் உலகளவில் ரூ. 86 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்மூலம் படுதோல்வியை தக் லைஃப் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.