பாகுபலி, கேஜிஎஃப்-லாம் ஓரம் போங்க? வசூல் மன்னனான ஆண்டவரின் விக்ரம்
உலக நாயகன் என்றும் ஆண்டவர் என்றும் புகழப்படும் நடிகர் கமல் ஹாஅன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெற்றி நடைபோடும் படம் விக்ரம். கமல்ஹாசன் வாழ்ந்தாலில் பல ஆண்டுகள் கழித்து 300 கோடிக்கும் மேல் வசூலை பெற்ற படமாக விக்ரம் அமைந்துள்ளது.
திரையரங்கில் தொடர்ந்து 17-வது நாளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் விக்ரம் படம் சர்வதேச அளவில் 365 கோடி வசூலை வாரிக் குவித்திருகிறது. தமிழகத்தில் மட்டும் கடந்த 17 நாட்களில் 160 கோடியை தாண்டியுள்ளது.
கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத வகையில் தமிழகத்தில் முன்னதாக ரூபாய் 152 கோடி வசூல் சாதனை செய்து முதல் இடத்தில் இருந்த பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை 17 நாட்களில் முறியடித்து விக்ரம் படம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது.
சமீபத்தில், 40 வகை சைவ அசைவ விருந்தை சென்னையிலுள்ள ரேஸ் கோர்சில் வழங்கினார். இதுகுறித்த வீடியோ சோசியல் மீடியாவில் தற்போது ட்ரெண்டாக்கினார்.
கமல் ஹாசன் நடிப்பில் இதுவரை வெளியான எல்லா படங்களை காட்டிலும் விக்ரம் திரைப்படம் வசூலில் பின்னிப் பெடல் எடுப்பதால் இவ்வளவு நாள் கிடைக்காத பெருமை இந்தப் படத்தின் மூலம் கமலுக்கு கிடைத்து ரஜினி, அஜித், விஜய் வரிசையில் பாகுபலி, கேஜிஎஃப் படங்களை ஓரங்கட்டி பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக கமலை மாற்றியுள்ளது.