திருமணம் ஆகாத நடிகை தான் வேண்டும் என அடம்பிடித்த கமல்.. ஓகே சொன்ன பிரபலம்

Kamal Haasan Trisha
By Kathick Jan 02, 2023 08:00 AM GMT
Report

கமல் ஹாசன் அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் தன்னுடைய 233வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கும் தனது 234வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது.

இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்க போகிறார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்நிலையில், இப்படத்தில் நடிகை திரிஷா தான் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம். ஏற்கனவே கடந்த ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்த திரிஷா தற்போது மீண்டும் ஒரு முறை மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

அதுமட்டுமின்றி 39 வயது ஆகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் திரிஷா ஏற்கனவே கமல் ஹாசனின் மன்மதன் அன்பு, தூங்காவனம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.