பிக்பாஸில் இந்த வாரமும் கமல் இல்லையா? தொடரும் நடிகையின் ராஜாமாதாவின் ஆட்சி..

television kamalhaasan ramyakrishnan
By Edward Nov 30, 2021 04:19 AM GMT
Report

தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பது பிக்பாஸ் 5 சீசன். தற்போது வைல்ட் கார்ட்டில் மூவர் உள்ளே நுழைந்த நிலையில் கடந்த வாரம் ஐக்கி பெர்ரி வெளியேறினார்.

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, கொரோனா வைரஸால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதால் அவருக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

இந்த வாரமும் நடிகர் கமல்ஹாசன் உடல் நிலையில் மாற்றம் இல்லை என்று தெரிகையில் ரம்யா கிருஷ்ணன் இந்த வாரமும் தொடர்ந்து தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த வாரமே ரம்யா கிருஷ்ணன் உங்கள் அளவிற்கு இல்லை என்று கூறி வந்த நிலையில் இந்த வாரம் டிஆர்பி அடிவாங்கவும் வாய்ப்புள்ளது என்று கூறி வருகிறார்கள்.