அப்போ துரத்தி அடிச்சீங்க! சிவகார்த்திகேயனால் லாபத்தில் புரளும் கமல் ஹாசன்...

sivakarthikeyan kamalhaasan sonypictures SK21 rajkamlproduction
By Edward Jan 18, 2022 04:05 PM GMT
Report

சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்து தற்போது கோடியில் சம்பளம் வாங்கிம் நடிகராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். ரஜினியை பார்த்து தான் நான் வளர்ந்தேன் அவரது தீவிர ரசிகர் நான் என்று சில ஆண்டுகளுக்கு முன் குஷ்பூ பேட்டியில் கூறியிருந்தார்.

இதனால் கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை திட்டித்தீர்த்து வந்தனர். அதன்பின் சிவகார்த்திகேயன், உலக நாயகன் உள்ளிட்ட நட்சத்திரங்களை சிலை திறப்பதற்காக திருச்செந்தூ கல்லூரிக்கு சென்றுள்ளனர். அப்போது மதுரை விமான நிலையத்தில் வரும் போது கமல் ரசிகர்களால் தாக்கப்பட்ட வீடியோ வைரலானது. சில மாதங்கள் வரை இந்த பிரச்சனை சிவகார்த்திகேயனுக்கு இருந்து வந்தது.

இந்நிலையில் கமல்ஹசன் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து சோனி பிக்சர்ஸும் சிவகார்த்திகேயனை வைத்து படத்தை தயாரிப்பதாக பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் அறிவித்தார் கமல்.

படம் அறிமுகப்படுத்தி பெயர் வைக்காத நிலையில் பல கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. அதாவது சோனி நிறுவனம் கமலிடம் தயாரிப்பு செலவாக 70 கோடி கொடுத்துள்ளனர். அதில் சிவகார்த்திகேயன் சம்பளமாக 30 கோடி, மற்ற செலவு 20 கோடி என போக மீதமுள்ள 20 கோடி கமலுக்கு லாபம் தானாம்.

அதேபோல் 50 சதவீத பங்கு கமலுக்கு செல்லும். மேலும் தியேட்டர் உரிமம் மற்றும் மற்ற வியாபாரங்கள் வைத்து பார்த்தால் கமல் சிவகார்த்திகேயனால் பல கோடி லாபமாக பெற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இப்போ எங்க போவீங்க கமல் ரசிகர்களே என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சீண்டி வருகிறார்கள்.