எதிர்பாராமல் பிக்பாஸ் செட்டில் கமல்ஹாசன்! உதவிய பிரபல ராஜமாதா.. வீடியோ லீக்..

biggboss television kamalhaasan ramyakrishnan biggbosstamil5
By Edward Nov 27, 2021 12:50 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 5 சீசனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த வாரம் அமெரிக்கா சென்று திரும்பிய அவருக்கு கொரோனா உறுதியானது. இதனால் தனிமைப்படுத்தப்பட்டு பிரபல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு பதில் யார் தொகுத்து வழங்கவுள்ளார்கள் என்று கூறி வந்த நிலையில் கமல் ஹாசன் கையில் ட்ரிப்ஸ் டேப்புடன் லைவ் வீடியோக்காலில் பேசியுள்ளார். தனக்கு கொரோனா என்பதை அறிமுகம் செய்து பின் உதவி செய்ய தோழி வந்துள்ளார் என்று நடிகை ரம்யா கிருஷ்ணனை வரவேற்றார்.

அதன் பிரமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கமலுக்கு இணையாக இல்லாமல் சுமாராக எப்படி தொகுத்து வழங்கவுள்ளார் என்பதை வைத்து மற்ற மொழிகளிலும் ரம்யா கிருஷ்ணனை கூப்பிடுவார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.