தக் லைஃப் படம் எப்படி இருக்கு!! பிரபல கொடுத்த ஸ்டார் ரேட்டிங்..

Kamal Haasan Silambarasan Mani Ratnam Tamil Movie Review Thug Life
By Edward Jun 04, 2025 11:00 AM GMT
Report

தக் லைஃப் படம் எப்படி இருக்கு

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். கமல் ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் நாளை ஜூன் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே கமல் ஹாசன், கன்னட மொழி பற்றி பேசிய விவகாரத்தில் கர்நாடகாவில் ரிலீஸாவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நாளை வெளியாகவுள்ள தக் லைஃப் படம் எப்படி இருக்கிறது என்ற தகவலை பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து ஒரு டிவிட்டை பகிர்ந்துள்ளார்.

தக் லைஃப் படம் எப்படி இருக்கு!! பிரபல கொடுத்த ஸ்டார் ரேட்டிங்.. | Kamal Str Acting Thug Life Movie How Is It Review

உமைர் சந்து விமர்சனம்

தக் லைஃப் படம் ஒரு கல்ட் கிளாசிக் திரில்லராகவும் கமல் ஹாசன் மற்றும் STR நடிப்பு புல்லரிக்க வைத்துள்ளதாகவும் பவர் பேக்ட் அக்ஷன் காட்சிகளில் அடிதூள் கிளப்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் மணிரத்னத்தின் டெட்லி காம்போ மீண்டும் ரசிகர்களை மிரளவிட காத்திருக்கிறது என்று கூறி 5க்கு 3.5 ஸ்டார் ரேட்டிங்கை கொடுத்துள்ளார் விமர்சகர் உமைர் சந்து.

ஏற்கனவே இதுபோல், பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் சமயத்தில் உமைர் சந்து விமர்சனம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.