பயங்கர விபத்தில் சிக்கிய ஷைன் டாம் சாக்கோ.. உயிரிழந்த அவரது அப்பா

Tamil Cinema
By Yathrika Jun 06, 2025 05:30 AM GMT
Report

பிரபல நடிகர்

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்கள் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ.

இவர் தமிழில் ஜிகர்தண்டா எக்ஸ் டபுள், குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து தமிழ் மக்களின் வரவேற்பையும் பெற்றார்.

சமீபத்தில் போதைப் பொருள் பிரச்சனையில் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது இவர் தனது அம்மா, அப்பாவுடன் பயணம் செய்தபோது தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கார் விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் சம்பவ இடத்தில் நடிகரின் தந்தை இறக்க அவரது அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பயங்கர விபத்தில் சிக்கிய ஷைன் டாம் சாக்கோ.. உயிரிழந்த அவரது அப்பா | Actor Shine Tom Chacko Met With An Accident