கமல் செய்த காரியத்தால் வாய்ப்பிளக்கும் அளவிற்கு ஷாக்கான லோகேஷ்! மீளமுடியாத விஷயமா இது?

Kamal Haasan Lokesh Kanagaraj Vikram Movie
By Edward May 31, 2022 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். 120 கோடி பொருட்செலவில் இப்படம் வரும் 3 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பிரமோஷனுக்காக கமல் ஹாசனும், லோகேஷ் கனகராஜுன் பேட்டி கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியொன்றில் படத்திற்கு துப்பாக்கிகள் தேவைப்படும் என்று கூறியுள்ளார். அதற்காக ஹிட்லர் கால துப்பாக்கியை கமல் ஹாசன் பல விலைக்கொடுத்து வாங்கி ஷூட்டிங்கில் பயன்படுத்தியிருக்கிறார்.

மேலும் தன்னுடைய பர்சனல் துப்பாக்கியையும் இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறாராம். மேலும் பல துப்பாக்கிகளின் கலெக்‌ஷன்கள் என்னிடம் இருப்பதாக கூறி எம் 16 வகை துப்பாக்கி மட்டும் யாரிடம் இல்லை என்பதால் என்னை அழைத்துக்கொண்டு 30க்கும் மேற்பட்ட துப்பாக்கியை காட்டினார்.

இதை பார்த்து ஷாக்காகிவிட்டேன். என்ன சார் இவ்வளவு துப்பாக்கி வெச்சிருக்கீங்க என்று வாய்ப்பிளந்தவாறு தான் கமல் சாரிடம் கேட்டேன் என தெரிவித்துள்ளார் லோகேஷ். தலைவன் படத்தில் நடிப்பது மட்டும் இல்லாமல் இதுபோன்ற விஷயத்திலும் பிரியமாக வைத்திருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.