பிபி5 முடிந்த அடுத்த நாளே மருத்துவமனை! கமல் ஹாசனுக்கு என்ன ஆச்சி?
kamalhaasan
tamilcinema
ulaganayagan
3 மாதங்கள் முன்
பிக்பாஸ் 5 சீசன் இறுதி நாள் நேற்று ஞாயிற்று கிழமை முடிந்து தன் பணியை செவ்வனே செய்து முடித்துள்ளார் நடிகர் கமல் ஹாசன். இதன்பின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளதாக நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து அடுத்த நாளே மருத்துவமனைக்கு சென்றுள்ளார் கமல். சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ள கமல் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கொரோனா பிடியில் இருந்து தப்பித்த கமல் பரிசோதனை முடிந்து இன்றே வீடு திரும்பவுள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.