என்னிடம் அந்த வேலையெல்லாம் காட்டக்கூடாது!! கவுண்டமணியை வெறுத்து ஒதுக்கிய கமல் ஹாசன்..
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து அவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளை பெற்றிருந்தவர் காமெடி நடிகர் கவுண்டமணி. கதாநாயன்களுக்கு இணையான சம்பளத்தை பெற்று வந்த கவுண்டமணி பேரும் புகழோடு வாழ்ந்து வந்துள்ளார்.
படங்களில் அவரின் வசனம் காமெடியை தாண்டி இரட்டை அர்த்தங்களுடன் சேர்ந்து தான் இருக்கும். மேலும் உருவ கேலி செய்வது, மட்டம் தட்டும் விதமான வசங்களை சேர்த்து கவுண்டமணி பேசுவார். அவரின் காமெடிக்கு ரசிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்பது போல் ரியல் வாழ்க்கையிலும் அவரது ஹூமர் சென்ஸ் நன்றாக இருக்கும்.
பெரும்பாலும் சத்யராஜ், மணிவண்ணன் போன்றவர்களுடன் அதிகமாக நேரம் செலவிட்டும் நடிக்கவும் செய்து வந்திருக்கிறார் கவுண்டமணி. அவரின் காமெடிக்கு ரஜினிகாந்த், பிரபு கூட தன்னை மறந்து சிரித்து விடுவார்கள்.
ஆனால், கவுண்டமணி ஒருமையில் பேசும் பேச்சு உலகநாயகன் கமல் ஹாசனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பிடிக்காமல் போயுள்ளது. அப்படி ஆரம்பத்தில் பல படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள்.
ஆனால் இந்தியன் படத்திற்கு பின் இருவரும் ஒன்றாக நடிக்கவில்லை. இதற்கு காரணம் கவுண்டமணி வசனங்களும் கவுண்டர் அடுக்கும் விதமும் கமல் ஹாசனுக்கு பிடிக்காமல் போனதுதான். ஆனால் கமல் ஹாசன் இப்படி நினைத்துக்கொண்டதை நினைத்து கவுண்டமணி ஒரு விசயமாக எடுத்துக்கொண்டதே கிடையாதாம்.