விஜய் அஜித்தெல்லாம் ஓரமா போங்க! தமிழ் சினிமாவை மாற்றும் கமல்ஹாசனின் விக்ரம்..

Kamal Haasan Vijay Sethupathi Lokesh Kanagaraj Vikram Movie
By Edward May 16, 2022 05:39 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்கள் கதை அளவில் சுமாராக இருந்ததால் ரசிகர்களை திருப்தி படுத்தாமல் இருந்து வந்துள்ளது. ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் ஆரம்பித்து விஜய்யின் பீஸ்ட் வரை படுமோசமான விமர்சனத்தை பெற்று பிளாப்பாகியது.

இந்நிலையில் கமல் ஹாசனாவது சிறந்த படத்தை கொடுப்பாரா என்று எதிர்ப்பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள். அப்படியொரு படத்தினை கொடுக்கவுள்ளார் உலக நாயகன். மாஸ்டர் படத்திற்கு பிறகு கமல் ஹாசன் நடிப்பில் இயக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். யாரும் எதிர்ப்பார்க்காத அளவில் படத்தில் பல காட்சிகள் தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் நடிகர் சூர்யா சிறப்பு காட்சியில் வரவுள்ளாராம். இந்நிலையில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் இப்படத்தில் ஆடியோ லான்ச் நேற்று நடைபெற்றது. மேலும் விக்ரம் படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய், அஜித் படங்களை அப்படியே தவிடுபொடியாக்க கமல்ஹாசன் விக்ரம் படம் ஜூன் 3ல் வெளியாகவுள்ளது என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.