விஜய்க்கு இதை கண்டாலே அலர்ஜியாம்! அப்போ ஏன் படத்துல மட்டும் வெச்சிங்க? கனல் கண்ணன்

vijay vishnu beast kanalkannan
By Edward Mar 28, 2022 06:00 PM GMT
Report

தமிழ் சினிமா முன்னணி நடிகராக இருக்கும் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் இப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

அனிருத் இசையில் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து, ஜாலியா ஓ ஜிம்கானா பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. யூடியூப்பில் பெரியளவில் சாதனை செய்தும் வருகிறது.

இப்படத்தின் மற்ற வேலைகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் படத்தின் டிரைலருக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் விஜய்யின் ஆரம்பகாலத்தில் இருந்து அவர் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய கனல் கண்ணன் விஜய் பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

கண்ணாடி பிரேக் செய்வது என்றாலே விஜய்க்கு அலர்ஜியாக இருக்கும். விஷ்ணு படத்தில் ஒரு சம்பவம் விஜய்க்கு நடந்தது என கூறியுள்ளார் கனல் கண்ணன்.