இயக்குனரை டார்ச்சர் செய்யும் பிரபல நடிகை!! ஷூட்டிங்கில் அல்லோலப்படும் லாரன்ஸ் படக்குழு

Gossip Today Kangana Ranaut
By Edward 2 மாதங்கள் முன்
Edward

Edward

சந்திரமுகி 2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் சந்திரமுகி. பி வாசு இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் நடித்த இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

ரஜினிகாந்திற்கு பதில் ராகவா லாரன்ஸ் நடிப்பில், ராதிகா, வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ராவ் ஸ்டூட்டிங் ஸ்பாட்டில் நடைபெறும் சந்திரமுகி 2 படத்தில் தற்போது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறாராம்.

முன்னணி இயக்குனரின் பாலிவுட் படத்தை உதறிவிட்டு பி வாசுவிடம் அரசவையில் நடனமாடும் கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

இயக்குனரை டார்ச்சர் செய்யும் பிரபல நடிகை!! ஷூட்டிங்கில் அல்லோலப்படும் லாரன்ஸ் படக்குழு | Kangana Atrocity With 30 People At The Shooting

கங்கனா ரனாவத்

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் கங்கனா 30 பேர் அடங்கிய மேக்கப், காஸ்டியூம், சமையல் செய்யும் நபர்களை அழைத்து வருகிறாராம்.

மேலும் ஷூட்டிங்கிற்கு தனி விமானத்தில் வருவதோடு 5 ஸ்டார் ஓட்டலும் அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாம். ஆனால் அந்த ஓட்டலில் அவரின் உதவியாளர்கள் தான் தங்கியிருக்கிறார்களாம்.

கங்கனா சிட்டிக்கு உள்ளே இருக்கும் ஒரு ஓட்டலில் தான் தங்கியிருக்கிறார். இதனால் படக்குழுவினருக்கு டார்ச்சராக இருக்கிறதாம். அவரை ஏன் கமிட் செய்தோம் என்று பி வாசு உட்பட பலரும் புலம்பி வருகிறார்களாம். 

Gallery