மத்திய அமைச்சருடன் காதலா!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கங்கனா ரனாவத்..

Gossip Today Indian Actress Kangana Ranaut Gossip Lanka
By Jai Apr 23, 2026 05:30 PM GMT
Report

கங்கனா ரனாவத்

தமிழில் ரவி மோகன் நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகை கங்கனா ரணாவத். இப்படத்தினை தொடர்ந்து பாலிவுட் சென்று டாப் நடிகையாக மாறினார். நடிகையாக மட்டுமில்லாமல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்து வருகிறார்.

மத்திய அமைச்சருடன் காதலா!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கங்கனா ரனாவத்.. | Kangana Ranaut Breaks Silence Relationship Rumours

இந்நிலையில் சமீபகாலமாக மத்திய மந்திரி சிராக் பாஸ்வானுடன் கங்கனா ரனாவத், காதலில் இருப்பதாக இணைத்து பேசப்பட்டு வருகிறது. இதனை அறிந்த கங்கனா, தமக்கும் சிராக் பாஸ்வனுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து பகிர்ந்துள்ளார்.

மத்திய அமைச்சருடன் காதலா

அதில், சிராக் என்னுடைய நண்பர், எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு பல ஆண்டுகளாக இருக்கிறது. ஏற்க்குறைய 10 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில்(miley naa miley hum) நடித்தோம். அன்றில் இருந்து இன்று வரை நாங்கள் நல்ல நண்கர்களாக இருக்கிறோம்.

மத்திய அமைச்சருடன் காதலா!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கங்கனா ரனாவத்.. | Kangana Ranaut Breaks Silence Relationship Rumours

எங்களுக்குள் காதல் இருந்திருந்தால், அது எப்போதோ மலர்ந்திருக்கும். நாங்கள் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதையுடனும், சகஜமாகவும் பழகுகிறோம். ஆனால் நட்பைத் தாண்டி எங்களுக்குள் வேறேதும் இல்லை, எந்த காதலும் இல்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கங்கனா ரனாவத்.

நாடாளுமன்ற வளாகத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டு பேசிய புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலானதை வைத்து இப்படியான வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.