சோம்பேறிகள், திறமையற்றவங்கன்னு சொல்லட்டுமா? கொந்தளித்து திட்டிய கங்கனா ரானாவத்...
கங்கனா ரானாவத்
பாலிவுட் நடிகையாகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்து வரும் நடிகை கங்கனா ரனாவத், சமீபகாலமாக சர்ச்சையான கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் மாண்டி மாவட்டத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தின் போது அவர் நடந்து கொண்டது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதில், பொது பணம் தவறானவர்களின் கைகளுக்கு செல்லக்கூடாது, திட்டங்களை செயல்படுத்துவதில் எந்தவொரு அலட்சியமும் காட்டக்கூடாது. பணிகளை செய்யாமல் கிடப்பில் போட்டால் நான் எப்படி ஊடகங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பேன். பிரச்சனையை தீர்க்கும் காலம் சென்றுவிட்டது. இதெல்லாம் ஒரு ஆண்டுகள் பழைய விஷயங்கள்.
சோம்பேறிகள், திறமையற்றவங்கன்னு
தற்போது வேலையை முடித்துவிட்டு வேலை முடித்துவிட்டோம் என்று எனக்கு அறிக்கை அளியுங்கள். 11 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம், ஆனால் ஒரு சிறு வேலைக்கூட நடக்கவில்லை. இது திறமையற்றது, கேவலமானது. ஊடகங்களிடம் நான் போய் என்ன சொல்வது, அவர்கள் சம்பளம் வாங்க மட்டுமே வருகிறார்கள் என்று சொல்ல முடியுமா?

நம் மாநில மக்கள் பற்றி நான் என்ன சொல்வது? அவர்களின் பணித்திறன் பற்றி என்ன சொல்வது, அவர்கள் எல்லாம் முழு சோம்பேறிகள், தகுதியற்றவர்கள், இப்படி நான் தேசிய ஊடகங்களிடம் சொல்ல முடியும்? மத்திய அரசின் திட்டங்கள் பேப்பர்களில் முடங்கிவிடக்கூடாது.
திட்டங்களின் பலன் கண்டிப்பாக கிராமங்களையும் உண்மையான பயனாளிகளையும் செல்ல வேண்டும். வளர்ச்சி திட்டங்களின் தரம், நிதி பயன்பாடு குறித்தும் அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டம் முடிவடைவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.