"அரசியல் தலைவரால் அந்த விஷயத்தை இழந்தேன்".. கங்கனா பரபரப்பு பேட்டி!
Kangana Ranaut
By Dhiviyarajan
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் நடிகை கங்கனா ரனாவத். இவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.தற்போது இவர் லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் சந்திரமுகி 2 -ல் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத்அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் சினிமா, அரசியல் என எதுவாக இருந்தாலும் அங்கு நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசிவருகிறேன்.
இதனால் அரசியல் தலைவர்கள் சிலர் பேர் என்னை விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் செய்து விட்டார்கள். தற்போது ஒரு ஆண்டுக்கு ரூபாய் 30- 40 கோடி வருவாயை இழந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்