இயக்குனர் கொடுத்த டார்ச்சரால் அமெரிக்காவுக்கு ஓடிய பிரியங்கா சோப்ரா!! உண்மையை கூறிய நடிகை
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இப்படத்தினை தொடர்ந்து பாலிவுட் வாய்ப்புகள் பெற்று முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார்.

இதனைதொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தார். பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, பாலிவுட் சினிமாவில் இருந்து விலகி அமெரிக்காவில் செட்டிலாகுகிறேன் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து அவர் கூறியது, பாலிவுட் சினிமாவில் நான் ஓரம் கட்டப்பட்டேன், சில அரசியல் எனக்கு பிடிக்கவில்லை என்றும் படவாய்ப்புகள் போகப்போக குறைய ஆரம்பித்துவிட்டதால் சில காலம் ஓய்வெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஹாலிவிட்டில் வாய்ப்புகள் வருவதால் இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் கணவருடன் செட்டிலாகப்போகிறேன் என பிரியங்கா சோப்ரா.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்து விலகியதற்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து ஒரு டிவிட் போட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
ஷாருக்கானுடனான நட்பில் இருக்கும் பிரியங்கா சோப்ரா மீது கரண் ஜோஹர் பிரச்சனை ஏற்படுத்தி வந்தார் என்றும் பிரியங்காவை குறிவைத்து கொடுமைப்படுத்தி அவரை இந்தியாவை விட்டே செல்லும் படி செய்துவிட்டார் கரண் ஜோஹர் என்று கங்கனா ரானாவத் பதிவிட்டுள்ளார்.
Media wrote extensively about her fall out with Karan Johar because of her friendship with SRK and movie mafia Cruella who is always looking for vulnerable outsiders saw a perfect punching bag in PC and went all out in harassing her to a point where she had to leave India.
— Kangana Ranaut (@KanganaTeam) March 28, 2023