கங்குவா படம் ஓடிடி தளம் எப்போது!! மீண்டும் வெச்சு செய்யப்போகும் நெட்டிசன்கள்..

Suriya Gossip Today Siva (director) Kanguva
By Edward Dec 06, 2024 12:30 PM GMT
Report

கங்குவா

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கங்குவா. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல், நட்டி நட்ராஜ், கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

கங்குவா படம் ஓடிடி தளம் எப்போது!! மீண்டும் வெச்சு செய்யப்போகும் நெட்டிசன்கள்.. | Kanguva Movie Ott Release Date Netizens Waiting

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் வசூல் சரிவை சந்தித்தது. படத்தில் அதிகம் இரைச்சல் இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்படி 2 பாயிண்ட் குறைத்தும் படம் மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது.

அமேசான் ஓடிடி

இதுவரை கங்குவா திரைப்படம் வட அமெரிக்காவில் வெறும் 6 கோடி மட்டுமே வசூலித்ததாகவும். சுமார் ரூ. 25 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நெட்டிசன்கள் இடையே கலாய்க்கப்பட்டு வந்த கங்குவா படம் அமேசான் ஓடிடி தளத்தில் வரும் 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் நெட்டிசன்கள் கங்குவா படத்தை HD வீடியோவோடு மீண்டும் கலாய்க்க ரெடியாகவுள்ளனர்.