விஜய்யை கழிவி ஊற்றிய பிரபலம்.. அதுக்குன்னு இப்படியா பேசுறது..
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து நடிவர் விஜய் லியோ படத்தின் வேலையில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் அரசியலில் நுழைவது குறித்த சில விசயங்களை செய்தும் வருகிறார்.
சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அரசு தேர்வின் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவித்தார். இந்த விசயம் விஜய்யின் அரசியல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜய்யின் அரசியல் மற்றும் சினிமா பற்றிய பல விசயங்களை சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
தளபதி விஜய்க்கு கெட்ட நேர எப்படி வேணாலும் வரும். எல்லோரும் எம்ஜிஆர், என் டி ராமாராவ் ஆகமுடியாது. அரசியல் ஆரம்பித்த பாக்யராஜ், டி ராஜேந்தர், விஜயகாந்த் எங்கே இருக்காங்க. அப்பா சந்திரசேகரே அரசியல் ஆரம்பிச்சாரு. விஜய் ஒன்னும் சிறந்த நடிகர் இல்லை. ஒரு அதிர்ஷ்டத்தால் நம்பர் 1 நடிகர் இடத்தில் இருக்காரு. அதிர்ஷ்டத்தில் சம்பாதிச்சி இருக்கீங்க வந்த வேகத்தில் போய்டாம பாத்துக்கோங்க, ரஜினிகாந்த் மற்றும் அப்பாவிடம் கேட்டுக்கோங்க.
எதிர்பாராத வளர்ச்சியில் நிற்கிறீர்கள், அதிர்ஷ்டத்தில் வந்து இருக்கீங்க, அதுக்கு அப்புறம் தைரியம் இருந்தால் வாங்க, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்று விஜய் அரசியல் பற்றி விமர்சித்திருக்கிறார் காந்தராஜ். மெர்சல் படத்தின் போது ஆலப்போறான் தமிழன் என்ற பாடல் இருந்திருக்கும். விஜய்யை ஜெயலலிதா கூப்பிட்டு, 1.30 மணி நேரம் வெளியில் உட்கார வைத்து கூப்பிடவில்லை.
அதன்பின் கூப்பிட்டு ஜாக்கிரதையா இருன்னு சொல்ன்னாங்க, அன்னிக்கே அரசியல் ஓவர். 234 தொகுதிகளில் சிறந்த மாணவர்கள். மாவட்ட வாரியாக தான் எடுப்பாங்க, தொகுதி வாரியாக யாரும் எடுக்கமாட்டாங்க. இவரே சொல்றாரு ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பேன்னு. அவரே என்ன பண்ணாரு, அப்படி தான் எல்லா கட்சியும் கொடுக்குது.
234 தொகுதியின் பெற்றோர்களை அழைத்து இன்னைக்கே காசு கொடுக்குற, அப்புறம் நீ எப்படி அரசியலுக்கு வர. 200 கோடி சம்பளம்னு சொல்றாங்க, அதன் விளைவை அவரே அனுபவிப்பாரு. விஜய்க்கு ஒரு பிளஸ் பாய்ண்ட் தமிழர், பிஜேபி, அவரை ஜோசப் விஜய் என்று விமர்சித்தவர்கள் ஆதரவாக தற்போது பேசுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
சிகரெட் காட்சிகளில் என்ன அரசியல் இருக்கிறது என்றும் மாணவர்களையும் இளைஞர்களை அரசியலில் கூப்பிடுவது அயோக்யத்தனம். விஜய் சொன்னதால் தான் குடிப்பது புகைப்பதுன்னு இருக்காங்க.
இவர் பேசிய இந்த கருத்திற்கு விஜய் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டியும் விமர்சித்தும் வருகிறார்கள்.
