நானும் அட்ஜெஸ்மெண்ட் கேட்டு இருக்கேன்.. ஷகிலா படம் பார்த்திருக்கேன்.. பிரபலம் ஓப்பன் டாக்..

Tamil Cinema Shakeela Gossip Today
By Edward Sep 11, 2024 07:45 PM GMT
Report

கேரளாவில் சமீபத்தில் ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை பற்றிய பேச்சுகள் தான் எழுந்து வருகிறது. தமிழ் சினிமாவிலும் இதுபற்றி பேச ஆரம்பிக்க முன்னணி நடிகைகள் முதல் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வரை இதுதொடர்பான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

நானும் அட்ஜெஸ்மெண்ட் கேட்டு இருக்கேன்.. ஷகிலா படம் பார்த்திருக்கேன்.. பிரபலம் ஓப்பன் டாக்.. | Kantharaj Recent Talk About Physical Harassment

இதுபற்றி மருத்துவரான காந்தராஜ் அளித்த பேட்டியொன்றில், தற்போது அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பலரும் பேசி வருகிறார்கள். அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது பாலியல் பலாத்காரம் கிடையாது. ஒருவருடன் உடலுறவு கொள்ள மற்றொருவர் ஆசைப்படுகின்றார் என்றால் அது எப்படி நடக்கும், அதற்கு அவரிடம் கேட்டால் தானே நடக்கும். அப்படியானால் அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது இருவருக்கும் சம்மதத்துடன் நடப்பது. அப்படி யாராவது கேட்டால் நோ சொல்லிவிட்டால் அங்கேயே முடிந்துவிடும்.

சினிமாவை போன்று மருத்துவத்துறையிலும் இருக்கிறது நானும் பலரிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து கேட்டுள்ளேன். அவர்களும் சம்மதித்தார்கள். எல்லாம் நடந்துமுடிந்தது, இதில் தவறு ஏதும் இல்லை. சினிமா நடிகைகளுக்கு நடந்ததும் இதேதான். அன்றைக்கு அமைதியாக இருந்துவிட்டு இன்றைக்கு அப்படி செய்துவிட்டார்கள் என்று கூறுவது எந்தளவிற்கு சரி எனத்தெரியவில்லை.

நானும் அட்ஜெஸ்மெண்ட் கேட்டு இருக்கேன்.. ஷகிலா படம் பார்த்திருக்கேன்.. பிரபலம் ஓப்பன் டாக்.. | Kantharaj Recent Talk About Physical Harassment

நான் நிறைய ஷகிலா படம் பார்த்திருக்கிறேன், ஷகிலா நடித்த படங்கள் எல்லா மன்மதனுக்கான பக்திப்படங்கள். என் ஆசிரியர்கள் யாரும் கண்டுவிடக்கூடாது என்று தலைக்கு முண்டாசு கட்டிக்கொண்டு பார்ப்பார்கள், நாங்கள் முதல் வரிசையில் ஷகிலா படம் பார்ப்போம். சினிமாவில் இருக்கும் அனைவரும் அட்ஜெஸ்ட் செய்து போக வேண்டியது பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கிவிட்டார்கள்.

எடிட்டரிடம் அட்ஜெஸ்ட் செய்யவில்லை என்றால் உங்களின் காட்சியை நீக்கிவிடுவார். கேமராமேனிடம் அட்ஜெஸ்ட் செய்யவில்லை என்றால் வேறுக்கோணத்தில் காட்டுவார். இயக்குநர், நடிகர்களிடம் ஒத்துழைக்கவில்லை என்றால் அடுத்த வாய்ப்பு கிடையாது என்று காந்தராஜ் பொருள்படும்படி பேசியிருக்கிறார்.