சிவனாண்டியின் தூண்டுதலால் ஊர் மக்கள் எடுத்த முடிவு.. கார்த்திக் குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். கடந்த சனிக்கிழமை எபிசோடில் இரண்டு ஊருக்குள்ள இடையே அடிதடி ஏற்பட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது கலவரத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து கோவிலுக்கு சீல் வைக்க காவல்துறை முடிவெடுக்கிறது. இதனால் பரமேஸ்வரி பாட்டி மனமுடைந்து போகிறார்.
இதைத்தொடர்ந்து மறுபக்கம் ராஜராஜன் கோவில் கும்பாபிஷேகம் நடக்காமல் போகும் நிலை உருவானதால் வருத்தப்பட சாமுண்டீஸ்வரி இதுக்கு நான் காரணமில்லை என்று சொல்கிறாள்.

அடுத்ததாக சிவனாண்டியும் சந்திரகலாவும் சந்தித்துக் கொண்டு எல்லாம் நாம திட்டமிட்ட படியே சரியாக நடக்கிறது என சந்தோஷப்படுகின்றனர். சிவனாண்டியின் ஆட்கள் பரமேஸ்வரி பாட்டி வீட்டு மீது கல்வீச கல் பாட்டியின் மீது விழுந்து காயம் ஏற்படுகிறது.
அடுத்ததாக ஊர்காரர்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க அப்போது சிவனாண்டி கார்த்தியோட குடும்ப பிரச்சனைக்காக எதுக்கு கும்பாபிஷேகம் நிற்கணும்? அப்புறம் நாம எல்லாரும் தான் தெய்வ குத்தத்திற்கு ஆளாகனும்.
கார்த்தியை இந்த கும்பாபிஷேகத்தில் இருந்து விலகிக்க சொல்லிட்டு சாமுண்டீஸ்வரி வைத்து கும்பாபிஷேகத்தை நடத்தலாம் என சொல்ல வேறு வழியில்லாமல் ஊர்காரர்களும் இந்த முடிவுக்கு வருகின்றனர். இருந்தாலும் தயக்கத்துடன் கார்த்தியை சந்தித்து விஷயத்தை சொல்ல பரமேஸ்வரி பாட்டி இந்த கோவில் கும்பாபிஷேகத்துக்காக அவன் எவ்வளவு பண்ணி இருக்கான் என கோபப்படுகிறார்.

ஆனால் கார்த்திக் பரமேஸ்வரி பாட்டியை தடுத்து நிறுத்துகிறான். ஊர்க்காரர்கள் முடிவுக்கு சம்மதம் தெரிவிக்கிறான். அதன் பிறகு சந்திரகலா ரேவதி சந்தித்து நடப்பதெல்லாம் நல்லா இருக்கா என நக்கலாக பேசுகிறாள். ரேவதி நாம அம்மாவை விட்டு வந்ததால் தன் இவ்வளவு பிரச்சனை என வருத்தப்பட்டு யோசிக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.