அதிர்ஷடம் இல்லாத கமல் ஹாசன்னு பரப்பியதே சூப்பர் ஸ்டார் தான்.. பிரபலம் கொடுத்த ஷாக்..
சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்களில் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சித்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து வருகிறார் டாக்டர் காந்தராஜ். தற்போது கமல் - ரஜினி குறித்த ஒரு தகவலை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
கமலை வளரவிடாத அமிதாப்
இந்தியில் கமல் ஹாசனை ஓரங்கட்டினார்கள். அமிதாப் பச்சன் அங்கே கமலை வளரவிடாமல் செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமா அதை எல்லாத்தையும் யோசிக்காமல் செய்தார். சென்னையில் ஒரு இந்தி படத்தின் தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, அந்தப்படத்தில் அமிதாப் பச்சன் மெயின் ஹீரோ. ஸ்ரீதேவி ஹீரோயின்.
கமல் ஹாசன் செகண்ட் ஹீரோ. எதார்த்தமாக அந்த ஷூட்டிங்கிற்கு நான் சென்ற போது அங்கு உடன் ஸ்ரீதேவி இருந்தார். என்ன படம் என்று நான் கமலிடம் கேட்க, அமிதாப் ஹீரோ, நான் இரண்டாம் ஹீரோ என்று கூறி பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது இந்த படம் ரிலீஸாகும் என்று எனக்கு தோன்றவில்லை என்று கமலிடம் கூறியது போலவே அந்தப்படம் ரிலீஸ் ஆகவில்லை. கமல் ஹாசனை வைத்து பட எடுத்தால் அந்த படம் டிராப்பாகும், அவர் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவர் என்ற நெகட்டிவிட்டியை உருவாக்கினார்கள்.
அடுத்ததாக அந்தா கானுன் படத்தில் ரஜினியை நடிக்க வைத்து அவரை தூக்கிவிட பார்த்தார்கள். ஆனால் ரஜினி ஒருசில இந்தி படங்களில் நடித்துவிட்டார். அப்போதைய சூழலில் அமிதாப்புக்கு சினிமா பின்னணி, அரசியல் பின்னணி இருந்தது. அதனால் அவரை எதுவும் செய்யமுடியாது என்று காந்தராஜ அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.