வசூலில் அடிவாங்கிய கர திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் இதோ

Box office Kara
By Karthick Raja May 06, 2026 05:40 AM GMT
Report

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் கர. போர் தொழில் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து மமிதா பைஜூ, ஜெயராம், கருணாஸ், சுராஜ் ஆகியோர் நடிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

வசூலில் அடிவாங்கிய கர திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் இதோ | Kara Movie Box Office

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான கர ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தால், வசூலில் அடிவாங்கியுள்ளது.

இந்நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 42 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்திருக்கும் குறைவான வசூல் என கூறப்படுகிறது.