தனுஷின் கர திரைப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்..
Dhanush
Kara
By Karthick Raja
தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் கர. இப்படத்தை போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்க, வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முதல் முறையாக நடிகை மமிதா பைஜு நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து ஜெயராம், சுராஜ், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்ப்புடன் நேற்று திரையரங்குகளில் வெளிவந்த கர திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷின் கர திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 5.5 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.