அண்ணன் தம்பிகளை காதலித்த ஜான்விகபூர் சாரா அலிகான்? உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்..
பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகைகளாக வளர்ந்து வரும் நடிகைகளாகவும் திகழ்ந்து வருபவர் ஜான்வி கபூர், சாரா அலிகான். ஸ்ரீதேவி மகளாக தடக் படத்தில் அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். அதேபோல் சைஃப் அலிகான் மகளாக சாரா அலிகானும் பாலிவுட் சினிமாவில் நடித்து முன்னணி இடத்தில் இருக்கிறார்.
சமீபத்தில் இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோகன் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டுள்ளனர் சாரா மற்றும் ஜான்வி. காமெடியாக சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் சாரா அலிகான் விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். இதை கேட்டு ஜான்வி கபூர் சிரிக்க உனக்கும் பிடிக்குமா என்று கேட்டுள்ளார் சாரா.
இதன்பின் பேண்டமிக் காலகட்டத்தில் நடந்த ஒன்றினை சொல்கிறேன். உங்களுக்கு இடையேயான நட்பு பற்றி எனக்கு தெரியாது.
அண்ணன், தம்பிகளை இருவரும் காதலித்தது மட்டும் எனக்கு தெரியும். சகோதரர்களை டேட் செய்தீர்கள் நான் வசிக்கும் இடத்தில் தான் அவர்களும் வசித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
அது வீர் பஹாரியா, ஷிகார் பஹாரியா தான் என்று நெட்டிசன்கள் தற்போது ஜான்வி கபூர் சாரா அலிகான் காதலருகளுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து கலாய்த்து வருகிறார்கள்.