பிக் பாஸ் தோற்ற விரக்தியில் நடுரோட்டில் பீர் குடித்த போட்டியாளர்

BIgg Boss
By Parthiban.A Feb 02, 2022 01:30 AM GMT
Report

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என சொல்லி பிக் பாஸ் ஷோவில் நடக்கும் அட்ராசிட்டிக்கு மட்டும் பஞ்சம் இருக்காது. எதிர்பார்க்காத ஒருவர் திடீரென வெளியேற்றப்படுவது தொடங்கி ஆதரவு குறைவான போட்டியாளருக்கு டைட்டில் கிடைப்பது வரை எல்லாமே நடக்கும்.

சமீபத்தில் ஹிந்தியில் பிக் பாஸ் 15ம் சீசன் நடந்து முடிந்திருக்கிறது. அதில் தேஜஸ்வி பிரகாஷ் டைட்டில் ஜெயித்தார். ஆனால் அது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆதரவு சற்று குறைவாக இருந்த அவருக்கு டைட்டில் எப்படி கிடைத்தது என விவாதம் நடைபெற்று வருகிறது.

பிரதிக் செஹாஜ்பால் இரண்டாம் இடமும், கரண் குந்த்ரா மூன்றாம் இடமும் பிடித்தனர். தற்போது கரண் குந்த்ரா இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் ஷோவில் இருந்து வெளியில் வந்த உடனேயே தான் நடுரோட்டில் அமர்ந்து பீர் குடித்ததாக கூறி இருக்கிறார். இதை தற்போது நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.