என்னிடம் அடிக்கடி கேட்கிறான்..மகனை பற்றி ஓபனாக பேசிய நடிகை கரீனா கபூர்..
கரீனா கபூர் கான்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கரீனா கபூர் கான், 45 வயதை தாண்டினாலும் இளமையுடம் தோற்றமளித்து வருகிறார்.
தற்போது ஒருசில படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வரும் கரீனா, தனது மகன் தைமூர் அலி கானுக்கு நடிப்பில் விருப்பமில்லை என்றும் விளையாட்டுகளில் தான் அதிக ஆர்வம் இருப்பதாக கூறியிருக்கிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தன் மகன் பற்றி பகிர்ந்துள்ளார்.
மகன் தைமூர் அலி
அதில், என் மகனுக்கு இசை, சினிமாவைவிட விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கிறான். விராட் கோலி, ரோஹித் சர்மா உங்களின் நண்பர்களா? என்றும் அவர்களிடம் இருந்து பேட்டை பரிசாக வாங்கித்தர முடியுமா? மெஸ்ஸியுடன் பேசுவீர்களா? என்று என்னிடம் அடிக்கடி கேட்கிறான். அவரின் தந்தை சைஃப் அலிகானை பார்த்து சமைப்பது, விளையாடுவது போன்றவற்றிலும் ஆர்வம் காட்டுகிறான் என்று கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.