குடும்பத்தை கவனிக்காத விஜய் எப்படி மக்களை கவனிப்பார்!! கொந்தளித்த நடிகர் நெப்போலியன்..
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், கரூரில் பரப்புரை ஆற்றும் போது சம்பவ இடத்தில் 41 பேர் உயிரிழந்தது இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என பலரும் விஜய்யை கண்டித்து பேசி வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் நெப்போலியன் விஜய்யை பற்றி விமர்சித்து பேசி இருக்கிறார்.
நெப்போலியன்
அதில், பிறப்போக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று சொல்வதோடு சரி, அவ்வாறு விஜய் நடந்து கொள்ளவில்லை. அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு, தனி விமானம் தேவையா? அரசியல்வாதி மக்களோடு கலந்திருக்க வேண்டும், நான் அரசியலில் இருந்தபோது அப்படித்தான்.
விஜய் யாரிடமும் பழகமாட்டார். அவரது குடும்பத்திலிருந்தே விலகியுள்ளார். குடும்பத்தை கவனிக்காத விஜய் மக்களை எப்படி கவனிப்பார் என்றும் கடுமையாக பேசியிருக்கிறார் நெப்போலியன். ஏற்கனவே போக்கிரி படத்தின் போது இருவருக்கும் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக, விஜய்யுடன் நெப்போலியன் நடிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.