ரயிலில் இருந்து குதுத்த நடிகை கரிஷ்மா சர்மா!! மருத்துவமனையில் சிகிச்சை..
கரிஷ்மா சர்மா
ராகினி எம் எம் எஸ் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கரிஷ்மா சர்மா. ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ள கரிஷ்மா, மும்பை சர்ச்கேட்டில் நடக்கவிருந்த படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார். இதற்காக அவர் புறநகர் ரயில் ஏறி செல்ல முடிவெடுத்தார்.
அவருடன் அவரது தோழிகளும் சென்றுள்ளனர். அவர்கள் ரயில் நிலையத்தில் நின்றபோது சர்ச்கேட் செல்லும் ரயில் வந்ததும், கரிஷ்மா சர்மா ரயிலில் முதல் ஆளாக ஏறினார்.
மருத்துவமனையில் சிகிச்சை
சில நொடிகள் மட்டுமே நிற்கும் புறநகர் ரயில் உடனே கிளம்பியது, ஆனால் ரயிலில் கரிஷ்மா சர்மாவின் தோழிகள் ஏறவில்லை. ரயில் கிளம்பிய பின் கரிஷ்மா சர்மா தனது தோழிகள் ரயிலில் ஏறவில்லை என்பதை கவனித்து, கீழே குதித்துள்ளார்.
இதனால் அவரது தலையில் அடிப்பட்டது. கரிஷ்மாவை அவரது தோழிகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் இப்போது சிகிச்சை எடுத்து வருகிறார். இதுதொடர்பாக கரிஷ்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதோடு மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படத்தையிம் பகிர்ந்துள்ளார்.