கார்த்தியின் 25 படத்திற்கு வந்த சோதனை.. ஜப்பான் படம் இத்தனை கோடி நஷ்டமா
Karthi
Tamil Cinema
Actors
Tamil Actors
Japan
By Dhiviyarajan
கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் தான் ஜப்பான். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியானது.
இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து இருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சுனில், விஜய் மில்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் கார்த்தியின் 25-வது படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது, ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. பல திரையரங்குகளில் ஜப்பான் படத்தை நீக்கிவிட்டதாக தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது.
இந்நிலையில் ஜப்பான் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு ரூ.30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.