ஷூட்டிங் ஸ்பாட்டில் கடுப்பாகி கத்திய பிரியாமணி!! கார்த்தி சொன்ன ரகசியம்..

Karthi Priyamani Gossip Today Sardar Ameer Sultan
By Jai Sep 02, 2026 11:39 AM GMT
Report

கார்த்தி

மெளனம் பேசியதே, ராம் போன்ற படங்களை இயக்கியப்பின் இயக்குநர் அமீர் இயக்கிய படம் தான் பருத்திவீரன். கார்த்தி, பிரியாமணி நடிப்பில் வெளியான இப்படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. இப்படத்திற்குப்பின் சூர்யா, கார்த்தி தரப்பிடம் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருக்கிறார் அமீர்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் கடுப்பாகி கத்திய பிரியாமணி!! கார்த்தி சொன்ன ரகசியம்.. | Karthi Reveals Why Priyamani Was Annoyed Shoot

இந்த விஷயத்தில் மறைந்த இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் எல்லாம் அமீருக்கே ஆதரவாக பேசினர். பின் ஞானவேல் ராஜா வருத்தமும் தெரிவித்தார். சூர்யா, கார்த்தி இது குறித்து இதுவரை அமைதியே காத்து வருகிறார்கள்.

பருத்திவீரனில் ஏற்பட்ட பிரச்சனை அமீரை ரொம்பவே மன உளைச்சலில் தள்ளியதாம். பருத்தி வீரன் படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் கார்த்தியின் நடிப்பு. அதேபோல் படத்திற்கு இன்னொரு பலமாக இருந்தவர் பிரியாமணி. முத்தழகு என்ற ரோலில் நடித்தவர் அசாட்டாக ஸ்கோர் செய்திருப்பார் இதற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

பிரியாமணி

இந்நிலையில் முத்தழகு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை நடிகர் கார்த்தி, வெளியாகவும் சர்தார் 2 பட பிரமோஷன் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் கடுப்பாகி கத்திய பிரியாமணி!! கார்த்தி சொன்ன ரகசியம்.. | Karthi Reveals Why Priyamani Was Annoyed Shoot

பேட்டியில் பேசிய கார்த்தி, பருத்திவீரன் படத்தில் நடித்தபோது நான் வெள்லையாக இருந்தேன், கருப்பாக மாற வேண்டும் என்பதால் என்னை வெளியில் எல்லாம் நிற்க வைத்தார்கள். நானும் அவர்கள் சொன்னபடியே செய்தேன், ஆனால் கருப்பாகவில்லை.

அதேசமயம் நந்தா படத்திற்காக சூர்யாவுக்கு இப்படி செய்தபோது அவர் கருப்பாகிவிட்டார். நான் கருப்பே ஆகவில்லை என்பதால் எனக்கு மேக்கப் போட சொல்லிவிட்டார்கள். மேக்கப் போட்டுத்தான் அப்படத்தில் நடித்தேன். ஷூட்டிங் எல்லாம் முடித்துவிட்டு மேக்கப்பை கலைத்தால் வெள்ளையாக இருப்பேன். அதை பார்த்து கடுப்பான பிரியாமணி, நீ மட்டும் எப்படி வெள்ளையா இருக்க என்று கடுப்பாகிவிட்டார் என்று கார்த்தி பேசியுள்ளார்.