அடிக்கடி பிரபல நடிகையை சந்தித்த நடிகர் கார்த்தி! அந்த வயசிலயே அப்படியா?
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை அமலா. முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, நாகர்ஜுனா போன்றவர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார். இதன்பின் 1992ல் நடிகர் நாக அர்ஜுனாவை காதலித்து திருமணம் செய்த அமலா சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை பார்த்து கொண்டார்.
அதன்பின் அகில் அக்கினேனியை ஈன்றார். தற்போது ஒருசில படங்களில் சிறப்பு கதாபாத்திரங்களில் நடித்து வரும் அமலா பற்றி நடிகை கார்த்தி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், கார்த்தியின் அப்பாவுடன் நடித்த நடிகைகளில் நடிகை அமலாவை ரொம்ப பிடிக்கும் என்றும் அவர் மீது க்ரேஸ் இருந்ததால் அவரை சந்திக்க அடிக்கடி அவர் வைத்திருக்கும் உணவகம் சென்று பார்த்து வருவேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் நான் பள்ளி படித்துக்கொண்டிருக்கும் போது அமலா உணவகத்தில் சாப்பாடு சாப்பிட செல்ல அவரை சந்திக்க அடிக்கடி செல்வேன் என்று கூறியுள்ளார். சமீபத்தில் கூட அவரை சந்தித்த போது இங்கே வருவாய் ஞாபகம் இருக்கா என்று கேட்டதற்கு தெரியாதது போல் முழித்தேன் என்று கார்த்தி காமெடியாக கூறியுள்ளார்.