தெலுங்கு, மலையாளத்தை பாருங்க, தமிழ் சினிமா மீது மிகவும் நொந்து போய் பேசிய கார்த்தி
Karthi
By Tony
கார்த்தி தமிழ் சினிமாவில் பல தரமான திரைப்படங்களில் நடித்து அசத்தியவர் என்பதை அனைவரும் அறிவோம்.
இவர் நடிப்பில் பருத்திவீரன், நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன், பையா, தீரன், கைதி, மெட்ராஸ், மெய்யழகன் என பல தரமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் சமீபத்தில் தமிழ் சினிமா குறித்து மிகவும் மனம் நொந்து பேசியுள்ளார். இதில், தெலுங்கு சினிமாவில் பிரமாண்டமான படங்களை செய்கிறார்கள், மலையாளத்தில் பல வித்தியாசமான படங்கள் வருகிறது.
நாம் என்ன தான் செய்துகொண்டு இருக்கிறோம், ஒரே மாதிரியான படங்களை செய்து கொண்டு இருந்தால் எந்த பயனும் இல்லை என கார்த்தி நொந்து போய் பேசியுள்ளார்.