3500 ரூபாய் சம்பளம்!! விவாகரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை!! போராடிய கார்த்திகை தீபம் கார்த்திக்..

Karthik Zee Tamil Tamil TV Serials Tamil Actors
By Edward Apr 05, 2026 09:30 AM GMT
Report

கார்த்திக் ராஜ்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்றுதான் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் கார்த்திக் ராஜ்.

3500 ரூபாய் சம்பளம்!! விவாகரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை!! போராடிய கார்த்திகை தீபம் கார்த்திக்.. | Karthigai Deepam Karthik Raj Painful Life Story

30 ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வரும் கார்த்திக் ராஜ், ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் மாதம் 3500 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்து கொண்டிருந்தபோது, தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் அது இது எது நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

அந்த சமயத்தில் தான் கனா காணும் காலங்கள் சீரியலுக்கான ஆடிஷன் நடந்து அதில் முக்கிய ரோலில் நடித்தார். பின் ஆபீஸ் சீரியலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். நம்பர் நடிகராக திகழ்ந்து வந்த கார்த்திக் ராஜுக்கு அதன்பின் வாய்ப்புகள் சரியாக வரவில்லை.

3500 ரூபாய் சம்பளம்!! விவாகரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை!! போராடிய கார்த்திகை தீபம் கார்த்திக்.. | Karthigai Deepam Karthik Raj Painful Life Story

அதன்பின் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் நடித்தார். அந்த சீரியலில் இருந்து சில காரணங்களால் வெளியேறிய கார்த்திக் ராஜுக்கு கார்த்திகை தீபம் சீரியல் வாய்ப்பு பெற்று நடித்து வருகிறார்.

விவாகரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை

மிகச்சிறப்பாக ஒளிப்பரப்பாகும் கார்த்திக் ராஜ் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்திருக்கிறது. யாஷி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்த கார்த்திக் ராஜ், 6 ஆண்டுகளாக வாழ்ந்தப்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

3500 ரூபாய் சம்பளம்!! விவாகரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை!! போராடிய கார்த்திகை தீபம் கார்த்திக்.. | Karthigai Deepam Karthik Raj Painful Life Story

அதற்கு காரணம் ஷபானா ஜோடி தான் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதன்பின் தனியாக வாழ்ந்து வரும் கார்த்திக் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து ஒருசில படங்களை தயாரித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.