துண்டோடு அலையவிட்டார்கள்...காயப்படுத்திய சம்பவத்தை உடைத்த சூரி..
சூரி
காமெடி நடிகராக திகழ்ந்து தற்போது மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் சூரி. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள மண்டாடி படத்தில் சூரி நடித்துள்ளார். மண்டாடி படம் செப்டம்பர் 4 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், ஒரு படத்திற்கு என்னை நடிக்க அழைத்தார்கள், ஒரு பெரிய நகைச்சுவை நடிகருடன் எனக்கு சீன் இருந்தது. ஷாட் எடுத்து முடித்தவுடன் இயக்குநரும், அந்த நடிகரும் சேர்ந்து மானிட்டார் பார்த்து ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பின் அந்த நகைச்சுவை நடிகர் பரிந்துரைத்த ஒருவரை எனக்கு பதிலாக நடிக்க வைத்தார்கள்.
நான் போட்டு வந்த சட்டையை கழற்றச்சொல்லி, அந்த நடிகருக்கு கொடுத்தார்கள். சட்டை அவருக்கு சேராததால் அதனை காஸ்டியும் குழுவினர் தூக்கி எங்கோ எறிந்துவிட்டார்கள் துண்டை வைத்து உடம்பை மறைத்துக் கொண்டு என் சட்டையை நான் தேடிக் கொண்டிருந்தேன்.

அப்போது நான் நடிக்க வேண்டிய காட்சியை இன்னொருவர் நடிப்பதை பார்த்து என்னை மிகவும் காயப்படுத்தியது. அந்த அனுபவங்களை கடந்து தொடர்ந்து சினிமாவில் பயணித்ததே இன்று தன்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்ததாக சூரி பகிர்ந்துள்ளார்.