கொலையை செய்தது நான் தான்.. ஆஜரான முக்கிய நபர், விடுதலையாகும் கார்த்திக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Serials Tamil TV Serials
By Karthick Raja Oct 07, 2026 10:30 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிவரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கொலை கேசில் கார்த்திகை கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

அதாவது கார்த்திகை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க ரேவதி, மயில்வாகனம், பாட்டி ரோகினி ஆகியோர் நேரில் சென்று சந்திக்கின்றனர். பாட்டியின் ரேவதியும் கார்த்திக்காக சமையல் செய்து கொண்டு போகின்றனர்.

பிறகு கார்த்திக்கை சந்தித்து சாப்பாட்டை கொடுத்து வருத்தப்பட கார்த்திக் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறான். இந்த சமயத்தில் ஏசி எஸ்டேஷனுக்கு வர இதை கவனித்த பாட்டி ஏசியை சந்தித்து அந்தக் கொலையை செய்தது கார்த்தி இல்லை நான்தான் என்று சொல்ல போலீஸ் கார்த்தியை விடுதலை செய்கின்றனர்.  

கொலையை செய்தது நான் தான்.. ஆஜரான முக்கிய நபர், விடுதலையாகும் கார்த்திக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Karthigai Deepam Serial Today Episode

இதையடுத்து கார்த்திக் பாட்டியை சந்தித்து எதுக்கு பாட்டி இப்படி பண்ணீங்க என்று கேள்வி கேட்க நீ வெளில இருந்தா உண்மையை கண்டுபிடிப்ப.. கூடிய சீக்கிரம் இந்த கொலையை செய்தது யார் என்பதை கண்டுபிடித்து உண்மையை நிரூபி என்று சொல்கிறார்.

அங்கே ராஜராஜன் தனது வீட்டில் சாமுண்டீஸ்வரியிடம் கோபப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.