கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் : சாமுண்டீஸ்வரியின் பிறந்தநாளில் காத்திருக்கும் அதிர்ச்சி? கொலைத் திட்டம் தீட்டும் சந்திரகலா!

Serials Tamil TV Serials
By Karthick Raja Nov 21, 2026 04:25 AM GMT
Report

ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ‘கார்த்திகை தீபம்’. இந்தத் தொடரில் தற்போது சாமுண்டீஸ்வரியின் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. சனிக்கிழமை எபிசோடில் அடுத்து என்னென்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.

சாமுண்டீஸ்வரியைக் கொல்லத் திட்டம் போடும் சந்திரகலா

ஸ்ரேயா, சந்திரகலாவிடம் போனில் பேசும்போது, பழைய லேப்டாப் பழுதாகிவிட்டதால் வேறு ஒரு லேப்டாப்பை ஏற்பாடு செய்து, அதில் சாஃப்ட்வேர் மூலம் ஹேக் செய்து சாமுண்டீஸ்வரியைக் கொல்லலாம் என்று சொல்கிறார். இதைக் கேட்ட சந்திரகலா, இதுவரை நடந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்தது நல்லதற்குத்தான் என்று கூறுகிறார்.

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் : சாமுண்டீஸ்வரியின் பிறந்தநாளில் காத்திருக்கும் அதிர்ச்சி? கொலைத் திட்டம் தீட்டும் சந்திரகலா! | Karthigai Deepam Serial Today Episode 21 11 2026

மேலும், அடுத்த நாள் சாமுண்டீஸ்வரிக்குப் பிறந்தநாள் என்பதால், அந்த நாளையே அவருடைய இறந்தநாளாக மாற்றிக் காட்டப்போவதாக ஆவேசமாகச் சொல்கிறார். பிறந்தநாளன்று இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

லேப்டாப்பைக் கைப்பற்றிய மயில்வாகனம்

மறுபக்கம், பீட்டர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட, மயில்வாகனம் அவனுடைய பழுதான லேப்டாப்பைக் கைப்பற்றி கார்த்திக்கிடம் ஒப்படைக்கிறார். அந்த லேப்டாப்பில் என்ன இருக்கிறது, அதன் மூலம் பீட்டர் என்ன திட்டம் போட்டிருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ள நினைக்கும் கார்த்திக், அதைச் சர்வீஸ் சென்டரில் கொடுத்து சரிசெய்யச் சொல்கிறார். அதன்படி மயில்வாகனமும் லேப்டாப்பை சர்வீஸ் சென்டரில் கொடுக்கிறார்.

கார்த்திக்கிடம் திட்டு வாங்கிய ரேவதி

இதற்கிடையில், பீட்டரைப் பற்றிய முக்கியமான தகவல்களைத் தெரிந்துகொள்ள ஒருவருடைய போன் அழைப்புக்காக கார்த்திக் பதற்றத்துடன் காத்திருக்கிறார். அந்த நேரத்தில் ரேவதி, கார்த்திக்கைப் பார்க்க வேண்டும் என்று போன் செய்கிறார். ஆனால், வேலையில் தீவிரமாக இருந்த கார்த்திக், இப்போது பார்க்க முடியாது என்று சொல்லிவிடுகிறார்.

இதனால் வருத்தமடையும் ரேவதி, பரமேஸ்வரி பாட்டிக்குப் போன் செய்து கார்த்திக்கைப் பார்க்க ஏதாவது வழி செய்யச் சொல்கிறார். உடனே பாட்டியும் தனக்கு இடுப்பு வலிப்பதாகச் சொல்லி, தன்னைப் பார்த்துக்கொள்ள ரேவதியை வீட்டுக்கு வரவழைக்கிறார். வீட்டுக்கு வந்த ரேவதி, கார்த்திக்கிடம் ஆசையாகப் பேசச் செல்கிறார்.

ஆனால், ஏற்கனவே பல பிரச்சனைகளால் டென்ஷனில் இருந்த கார்த்திக், "நான் என்ன பிரச்சனையில் இருக்கேன், இந்த நேரத்தில் நீ வேற வந்து பேசிட்டு இருக்கியா?" என்று ரேவதியைத் திட்டுகிறார். இதனால் மனமுடைந்த ரேவதி, பாட்டியிடம் நடந்ததைச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

சர்ப்ரைஸ் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குத் தயாராகும் குடும்பம்

மறுபக்கம், சாமுண்டீஸ்வரி தூங்கிய பிறகு வீட்டில் இருக்கும் அனைவரையும் அழைத்துப் பேசுகிறார் ஸ்ரேயா. அடுத்த நாள் சாமுண்டீஸ்வரிக்குப் பிறந்தநாள் என்பதால், அவருக்குத் தெரியாமல் சர்ப்ரைஸாகப் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்யலாம் என்று திட்டமிடுகிறார்.

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் : சாமுண்டீஸ்வரியின் பிறந்தநாளில் காத்திருக்கும் அதிர்ச்சி? கொலைத் திட்டம் தீட்டும் சந்திரகலா! | Karthigai Deepam Serial Today Episode 21 11 2026

இதைக் கேட்ட குடும்பத்தினரும் சாமுண்டீஸ்வரியின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடத் தயாராகிறார்கள். ஆனால், மறுபக்கம் சந்திரகலா அதே நாளில் சாமுண்டீஸ்வரியைக் கொலை செய்யத் திட்டம் போட்டுக் காத்திருக்கிறார். ஒருபக்கம் குடும்பத்தினர் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குத் தயாராக, இன்னொரு பக்கம் சந்திரகலா கொலைத் திட்டத்தைச் செயல்படுத்தக் காத்திருப்பதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சாமுண்டீஸ்வரியை கார்த்திக் காப்பாற்றுவாரா? சந்திரகலாவின் சதி கடைசி நேரத்தில் அம்பலமாகுமா? கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.