கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: சாமுண்டீஸ்வரிக்கு எதிராக சதித் திட்டம் போடும் சந்திரகலா... தினேஷ் எடுத்த அதிரடி முடிவு!
Zee தமிழில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் 'கார்த்திகை தீபம்'. இந்த சீரியலில் இப்போது அடுத்தடுத்து பல அதிர்ச்சியான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அப்படி நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சாமுண்டீஸ்வரி அறையில் தனியாக இருக்கும்போது, யோகி உள்ளே வந்து கதவைப் பூட்டிவிட்டு அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறான். இதைப் பார்த்து அதிர்ச்சியடையும் சாமுண்டீஸ்வரி போராடுகிறார். அப்போது சத்தம் கேட்டு அங்கு வரும் ஸ்ரேயா, கதவு பூட்டியிருப்பதைப் பார்த்து அதைத் திறக்கிறாள். உடனே யோகி, "சாமுண்டீஸ்வரிதான் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்" என்று அவர் மீதே பழியைப் போடுகிறான்.

இதனால் கோபத்தின் உச்சிக்குச் செல்லும் சாமுண்டீஸ்வரி, "எனக்கு ஆண்களையே பிடிக்காது. இவன் ஒரு கேடுகெட்டவன். இவனைக் கல்யாணம் செய்துகொண்டால் உன் வாழ்க்கையே நாசமாகிவிடும்" என்று ஸ்ரேயாவை எச்சரிக்கிறார். மேலும், யோகி மீது போலீசில் புகார் கொடுக்கப் போவதாகவும் சொல்கிறார். இதனால் பயந்துபோன யோகி, பக்கத்து அறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறான்.
யோகியின் மரணத்துக்குப் பிறகு ஸ்ரேயாவிடம் பேசும் சாமுண்டீஸ்வரி, "நீ ஒரு தவறான நபரிடமிருந்து தப்பித்துவிட்டாய். நல்லதே நடந்திருக்கிறது" என்று ஆறுதல் சொல்கிறார். ஆனால் ஸ்ரேயாவோ, "என் வாழ்க்கையையே நீங்கள்தான் கெடுத்துவிட்டீர்கள்" என்று சாமுண்டீஸ்வரி மீதே கோபப்படுகிறாள்.
இந்தப் பழைய கதையைச் சொல்லி முடிக்கும் சாமுண்டீஸ்வரி, "யோகி இறந்ததால்தான் அவர்கள் எல்லோரும் என் மீது இவ்வளவு கோபமாக இருக்கிறார்கள். இருந்தாலும் நான் அவர்களிடம் போய் மன்னிப்புக் கேட்கப் போகிறேன்" என்று சொல்கிறார். இதைக் கேட்கும் கார்த்திக் நடந்த உண்மையைப் புரிந்துகொள்கிறான்.
ஆனால் சுவாதியும் ரோகிணியும் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள். "அம்மா, நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. மற்றவர்கள் செய்த தவறுக்காக நீங்கள் ஏன் போய் மன்னிப்புக் கேட்க வேண்டும்?" என்று கேட்டு அவரைத் தடுக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், சுவாதி தனக்கு தினேஷைப் பிடித்திருந்தாலும், அம்மாவின் சுயமரியாதையை விட்டுக்கொடுத்து இந்தத் திருமணம் நடக்க வேண்டாம் என்று உறுதியாகச் சொல்கிறாள். மகளின் பாசத்தையும் அன்பையும் பார்த்து சாமுண்டீஸ்வரி நெகிழ்ந்து போகிறார்.

இதற்கிடையில், சாமுண்டீஸ்வரி வீட்டில் நடந்த விஷயங்களை முத்துவேல் மூலம் தெரிந்துகொள்ளும் சந்திரகலா, இதை வைத்து தனக்குச் சாதகமாக ஒரு திட்டம் போடுகிறாள். நேராக தினேஷ் வீட்டுக்குச் செல்லும் அவள், அங்கே ஸ்ரேயாவைச் சந்தித்துத் தனது திட்டத்தைச் சொல்கிறாள்.
"எதிரிக்கு எதிரி நண்பன். நீ சாமுண்டீஸ்வரிக்கு எதிரியாக இருந்தால் மட்டும் அவளை ஒண்ணும் செய்ய முடியாது. அவளிடம் நல்லவள் மாதிரி நடித்து, அவளுடைய வாழ்க்கையையே கெடுக்கலாம். ஆனால் இந்த விஷயம் உன் தம்பிக்குக்கூடத் தெரியக்கூடாது" என்று சந்திரகலா கூறுகிறாள். அவளுடைய திட்டத்தைக் கேட்ட ஸ்ரேயாவும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறாள். இதனால் சந்திரகலா - ஸ்ரேயா கூட்டணி உருவாகிறது.
மறுபக்கம், சுவாதியின் எதிர்காலத்தை நினைத்து ரேவதி கவலைப்படுகிறார். இதனால் கார்த்திக்கிடம் தனது வருத்தத்தைச் சொல்ல, "நாம் ஏதாவது செய்து இந்தப் பிரச்சினையைச் சரி செய்துவிடலாம்" என்று கார்த்திக் அவருக்கு ஆறுதல் கூறுகிறான்.
இதற்கிடையில், தினேஷ் தனது அம்மா பத்மாவிடம் சென்று அதிரடியாக ஒரு விஷயத்தைச் சொல்கிறான். "எனக்கு சுவாதியுடன் சேர்ந்து வாழ வேண்டும். இல்லையென்றால் இந்த வீட்டை விட்டே வெளியேறிவிடுவேன்" என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.