கொலை வழக்கில் கைது செய்யப்படும் கார்த்திக்.. நடக்கப்போவது என்ன? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Serials Tamil TV Serials
By Karthick Raja Oct 06, 2026 05:33 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சிவனாண்டி சாட்சி சொன்ன கற்பகத்தை கத்தியால் குத்திய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கொலை வழக்கில் கைது செய்யப்படும் கார்த்திக்.. நடக்கப்போவது என்ன? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Karthigai Deepam Today Episode Oct 06

அதாவது கற்பகம் உயிரிழந்து கிடக்க பஞ்சாயத்தில் ராஜா சேதுபதிக்கு எதிராக சாட்சி சொன்னதால் கார்த்தி தான் இப்படி செய்திருக்க வேண்டும் என்று பேச்சு கிளம்ப போலிஷ் சந்தேகத்தின் பெயரில் கார்த்தியை கைது செய்து அழைத்து செல்கின்றனர்.

இந்த விஷயம் அறிந்து அதிர்ச்சி அடையும் ரேவதி மற்றும் மயில்வாகனம் ஆகியோர் கார்த்தியை சென்று சந்தித்து பேசுகின்றனர். பரமேஸ்வரி பாட்டியின் கார்த்திக் கைது செய்யப்பட்டது நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க ஊர் மக்கள் பாட்டிக்கு ஆறுதல் சொல்கின்றனர்.

கொலை வழக்கில் கைது செய்யப்படும் கார்த்திக்.. நடக்கப்போவது என்ன? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Karthigai Deepam Today Episode Oct 06

மேலும் கார்த்தியை வெளியே கொண்டு வர வக்கீலை சந்திக்க அவர் கேசில் சில சிக்கல்கள் இருப்பதால் கார்த்தியை வெளியே கொண்டு வர இரண்டு, மூன்று நாட்கள் ஆகும் என அதிர்ச்சி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.