தல தளபதி-யை வைத்து கோடியில் புறளும் உதயநிதி!! சர்ச்சையை ஏற்படுத்திய 48 வயது நடிகை கஸ்தூரி

Ajith Kumar Vijay Kasthuri
By Dhiviyarajan Jan 11, 2023 03:30 PM GMT
Report

இந்த வருடம் பொங்கல் முன்னிட்டு அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் இன்று மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு கலவையான விமர்சனமும் கிடைத்து வருகிறது.

இருப்பினும் வாரிசு மற்றும் துணிவு, இதில் எந்த திரைப்படம் பொங்கல் வெற்றியாளர்? என்று கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.

தல தளபதி-யை வைத்து கோடியில் புறளும் உதயநிதி!! சர்ச்சையை ஏற்படுத்திய 48 வயது நடிகை கஸ்தூரி | Kasthuri Controversy Post Against Varisu Thunivu

நடிகை கஸ்தூரி

பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை கஸ்தூரி. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் சர்ச்சையாக பதிவிட்ட ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார்.

தல தளபதி-யை வைத்து கோடியில் புறளும் உதயநிதி!! சர்ச்சையை ஏற்படுத்திய 48 வயது நடிகை கஸ்தூரி | Kasthuri Controversy Post Against Varisu Thunivu

அதில் அவர், " மேலிடத்து ஆசீர்வாதத்துடன் தெனாவெட்டா டிக்கெட் 2,000! , வசூலை குவிக்க போவது யார்? தளபதி விஜய்யா? இல்லை தல அஜித்தா?. சந்தேகமே வேண்டாம் உதயநிதி ஸ்டாலின் தான்.

இது வாரிசு பொங்கலும் இல்லை, துணிவு பொங்கலும் இல்லை, இது 'ரெட் ஜெயன்ட் பொங்கல்' என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.