சோதனை எலியாக என் பொண்ணை அனுப்பி வச்சேன்..என் கையாலயே அதை செஞ்சேன்!! நடிகை கஸ்தூரி..
கஸ்தூரி
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முக்கிய நடிகர்களில் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கஸ்தூரி சங்கர். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய மகளுக்கு இரத்த புற்றுநோய் வந்தபோது தனக்கு ஏற்பட்ட வலி பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில், மரணத்தை 3 முறை சந்தித்து இருக்கிறேன். 2 முறை தோத்துவிட்டேன். ஒரு முறை மரணம் தோத்துப்போச்சு, என் பொண்ணை மரணம் தொட வரும் போது நாங்கள் விடவில்லை, அதற்கு என் கணவரும் காரணம், அவர் தான் என் மகளின் உயிரை காப்பாற்றியதாக நம்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
என் கையாலயே
மேலும், என் மகளை மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும் என்று சொன்ன அடுத்த ஏழரை வருடம் என் மகளுடன் நானும் ஆஸ்பிட்டலில் தான் இருந்தேன். கடந்த ஏழரை வருடமாக நான் நிம்மதியாக தூங்கியது இல்லை, குறைந்தபட்சம் 5 மணிநேரம் மட்டும் தான் தூங்கி இருப்பேன். புற்றுநோயோடு போராடி என் மகள் மீண்டு வருவாளா? இல்லையா? என்ற கேள்வியுடன் ஒவ்வொரு நாளும் நகர்ந்தது. இப்போதுதான் நான் நிம்மதியாக தூங்குகிறேன்.
என் மகளின் தலையில் கைவைக்கும் போது முடி கொத்துக்கொத்தாக வந்தது. அவளை ஆஸ்பிட்டலுக்குள் நாங்கள் அவளை அனுப்பும் போது ஒரு சோதனை எலியாக தான் அனுப்பினோம். அவளுக்கு ஊசி நான் தான் போட்டுக்கொண்டிருந்தேன். தினமும் ஸ்டீராய்டு ஊசி போட்டதால் அவளுடைய எலும்புகள் எல்லாம் பலன் இல்லாமல் போய்விட்டது.
பர்கர் சாப்பிடும்போது அவளுடைய பல் அந்த பர்கரில் வந்துவிட்டது. அவ்வளவுன் பலன் இல்லாமல் அவள் மாறியிருந்தாள். ஆனால் இன்று அவள் புற்றுநோயை எதிர்த்து போராடி ஜெயித்து வந்திருக்கிறாள், இந்த நோய் பாதிப்பில் இருக்கும் குழந்தைகள் மீண்டு வரவேண்டும் என்பதுதான் என் ஆசை என்று கண்கலங்கியபடி அழுது பேசியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.