அஜித் மாதிரி எனக்கு இன்னும் அது நடக்கல? 47 வயது நடிகையை கிண்டல் செய்த ரசிகர்கள்
தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளியான படம் வலிமை. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பலர் பாராட்டி வந்தாலும் ஒருசில அஜித்தை பற்றியும் அவரது உடல் வாகுவை பற்றியும் விமர்சித்து பேசி வருகிறார்கள்.
இதற்கு பதிலடி கொடுத்து பல பிரபலங்கள் மேடைகளில் பேசியும் கருத்துக்களை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார்கள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அஜித்தின் மகன் ஆதிவிக்கின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அப்போது குடும்பத்துடன் அஜித் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலானது. ஏகே 61 படத்திற்கான புதிய லுக்கை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வந்தனர். இதுகுறித்து நடிகை கஸ்தூரி அவரது டிவிட்டர் பக்கத்தில் அஜித்தின் நியூ லுக்கை பார்த்து கருத்தினை கூறியிருந்தார்.
அதில் தலைவரெல்லாம் தலைக்கு பொய்யையும் மையையும் போர்த்திக்கொள்ளும் நாட்டில் தல அஜித்தின் தனித்துவம் அழகு. நரையில் தெரியும் நேர்மை அழகோ அழகு. அழகான குடும்பம். சுத்தி போடுங்க! என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர் ஒருவர் உங்க தலையில் இருக்குறது ஒரிஜினல் முடியா? நரை விழாதா முடியா என்று கூறி கிண்டல் செய்துள்ளார். அதற்கு கஸ்தூரி இதுவரை எனக்கு முடி நரைக்கவில்லை என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுவரை எனக்கு முடி நரைக்க வில்லை.
— Kasturi Shankar (@KasthuriShankar) March 3, 2022
இதுவரை அந்த அவசியம் வரவில்லை.
— Kasturi Shankar (@KasthuriShankar) March 3, 2022