என்கிட்டயும் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டாங்க!.. விஜய்யின் ரீல் தங்கை பரபரப்பு பேட்டி
Vijay
Sexual harassment
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சில படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை அனுகிருஷ்ணா.
இவர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்தி படத்தில் முன்னணி நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார்.
அனுகிருஷ்ணா போயா வேலைய பாத்துக்கிட்டு, இளமி, சின்னஞ்சிறிய பறவை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படங்கள் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அனுகிருஷ்ணாவிடம் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேள்வி கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த இவர், என்னிடமும் பல பேர் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டார்கள். அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். எனக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் வேறு எதாவது வேலையை பார்த்து கொண்டு இருப்பேன் என்று அனுகிருஷ்ணா கூறியுள்ளார்.