மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் கட்டிப்புடி வைத்தியம் செய்ய வரும் பிரபலம்.. யாரு சிக்கப்போறாங்க தெரியலயே
bigg boss
ott
hotstar
kamal haasan
snehan
bigg boss 5
bigg boss ultimate
By Kathick
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 விரைவில் முடிவடையவுள்ள நிலையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பிக் பாஸ் தமிழின் முதல் OTT சீசனை ஜனவரி 30 முதல் தொடங்க உள்ளது.
ஏற்கனவே 5 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்கவுள்ளார். கடந்த பிக்பாஸ் சீசன்களில் பிரபலமான சில போட்டியாளர்களை மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்கள்.
இந்நிலையில், இதன் முதல் போட்டியாளராக பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட சினேகன், மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கவுள்ளார். இதனால், ரசிகர்கள் பலரும், 'மீண்டும் கட்டிப்புடி வைத்தியம் ஆரம்பம்' என ப்ரோமாவை பார்த்ததும் கமெண்ட் அடிக்க துவங்கிவிட்டனர்.
#BBUltimate-ல் சினேகன்!! #YaaruAnthaHousemate pic.twitter.com/kmivcxSGta
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) January 24, 2022