யாரையும் கட்டிப்பிடித்ததே இல்லையா!! நடிகரை ஷூட்டிங்கில் கலாய்த்த நயன்தாரா..
நடிகர் கவின்
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து தற்போதுதான் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் கவின். லிஃப்ட், டாடா உள்ளிட்ட வெற்றிப்படங்களை தொடர்ந்து விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஹாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய ரோலிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அப்படத்தின் இயக்குநர் விஷ்ணு எடவன் அளித்த பேட்டியொன்று இணையத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அவர் அளித்த பேட்டியில், முதலில் ஊர்க்குருவி என்ற படத்தை நயன் தாரா தயாரிப்பதாக இருந்தது. கவின் தான் நடிக்க கமிட்டாகினார். அப்போதில் இருந்தே கவினை, நயன்தாராவுக்கு நன்றாக தெரியும்.
முதல் நாள் ஷூட்டிங்கின்போது நயன் தாராவை கட்டிப்பிடிக்கும்படி காட்சி கொடுக்கப்பட்டது. அதில் நடிக்க கவின் ரொம்பவே தயங்கினார்.

கட்டிப்பிடித்ததே இல்லையா
உடனே நயன்தாரா மேடமோ, ஏன் இதற்கு முன் யாரையும் கட்டிப்பிடித்ததே இல்லையா என்று கேட்டு கலாய்த்துவிட்டார். செட்டில் இப்படித்தான் எப்போதும் சிரிப்பாக இருக்கும் என்று இயக்குநர் விஷ்ணு எடவன் தெரிவித்துள்ளார்.