5 வயது மூத்த நடிகையுடன் ரொமான்ஸ் செய்யும் கவின்!! இது நம்ம லிஸ்ட்டில் இல்லையே..
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வாய்ப்பு பெற்று பிரபலமானவர்களில் இருவர் நடிகர் கவின். பல ஆண்டுகள் சீரியலில் நடித்து வந்த கவின், சமீபத்தில், லிஃப்ட், டாடா போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பிடித்தார்.
இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் கவின், இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படத்திற்கு பின் புது படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார் கவின். இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்ரமன் அசோக் என்பவர் இயக்கத்தில் மாஸ்க் என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது.
இப்படத்தில் தன்னைவிட 5 வயது மூத்த நடிகையாக ஆண்ட்ரியாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் நடிகர் கவின்.