VJ சித்துக்கு நடந்ததுதான் சுபாஷினிக்கும்!! தற்கொலை விஷயத்தில் கயல் சீரியல் நடிகை எமோஷனல்..

Serials V. J. Chitra Tamil TV Serials Tamil Actress Actress
By Jai Apr 10, 2026 08:32 AM GMT
Report

சுபாஷினி தற்கொலை

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கலய் சீரியலில் நடித்த நடிகை சுபாஷினியின் திடீர் மரணம் சின்னத்திரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை ஐயப்பந்தங்கலிலுள்ள வீட்டில் சுபாஷினி தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் குறித்து பல கேள்விகள் எழுந்து வரும் நிலையில், அவருடன் நடித்த சக நடிகை அபிநவ்யா கண்கலங்கியபடி சுபாஷினி பற்றி பகிர்ந்துள்ளார்.

VJ சித்துக்கு நடந்ததுதான் சுபாஷினிக்கும்!! தற்கொலை விஷயத்தில் கயல் சீரியல் நடிகை எமோஷனல்.. | Kayal Serial Subhashini Suicide Co Star Abhinavya

அபிநவ்யா

அவர் கூறும்போது, சுபாஷினி உயிரிழந்ததாக கூறிய தகவலை அவர் உடனே நம்பவில்லையாம். ஒரு மணி நேரத்திற்கும் மேல் இது உண்மை இல்லை என்று நினைத்தேன், இது வேற யாராவது இருக்கு, தவறான தகவலாக இருக்கும் என்று சொல்லிக்கிட்டே இருந்தேன்.

ஆனால் பின் அது உண்மை என்று தெரிஞ்சதும் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. சுபாஷி இறந்தப்பின் சோசியல் மீடியாக்கள் பரவி வரும் கருத்துக்கள் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. ஒருவர் உயிரோடு இருக்கும்போது பேசுவது வேறு, ஆனால் அவர் இல்லாத பின் எப்படி வேண்டுமானாலும் பேசுறது தப்பு.

VJ சித்துக்கு நடந்ததுதான் சுபாஷினிக்கும்!! தற்கொலை விஷயத்தில் கயல் சீரியல் நடிகை எமோஷனல்.. | Kayal Serial Subhashini Suicide Co Star Abhinavya

இதே மாதிரி முன்பு விஜே சித்து விஷயத்திற்கும் நடந்தது. அவர் இறப்பதற்கு பின்பு பலர் பலவிதமாக பேசுறாங்க, இப்போது சுபாஷினிக்கும் அதேபோல் தான் நடக்குது, உண்மை தெரியாமல் யாரையும் குற்றம் சொல்லக்கூடாது என்று கூறியிருக்கிறார் நடிகை அபிநவ்யா.

பெங்களூருவில் இருந்து அவர் வந்ததால் ஆரம்பத்தில் போல்டான குணம் கொண்டவராக இருப்பார், நம்மோடு அதிகமாக கலந்துக்கமாட்டார் என்று நினைத்தேன். ஆனால் பின்னர் அவருடன் நெருக்கமாக பழகியப்பின் அந்த எண்ணம் முழுவதும் மாறிவிட்டது.

மிகவும் எளிமையான, நல்ல மனசு கொண்டவராக சுபாஷினி இருந்தார். என்னோடு மட்டுமில்லாமல் முழு கயல் சீரியல் குழுவினருடனும் நெருக்கமாக பழகினார். எப்போதும் சந்தோஷமாக இருப்பார். யாராவது நெகட்டிவ் பேசினால் அந்த இடத்தில் இருப்பதையே விரும்பமாட்டார். சத்தமாக பேசுவது பிடிக்காது, மிகவும் லைட்டான மனநிலையுடன் இருப்பார். டான்ஸ் செய்ய ஆரம்பித்தால் ஒரு மணி நேரம் கூட சுபாஷினி ஆடுவார். இவ்வளவு உற்சாகமாக இருந்தவர். இப்படியொரு முடிவெடுப்பார் என்று நினைத்ததே இல்லை.

VJ சித்துக்கு நடந்ததுதான் சுபாஷினிக்கும்!! தற்கொலை விஷயத்தில் கயல் சீரியல் நடிகை எமோஷனல்.. | Kayal Serial Subhashini Suicide Co Star Abhinavya

கணவர் பற்றி

சுபாஷினி, கணவர் பற்றி ஒருபோதும் தப்பா பேசவில்லை. ரெண்டு பேரும் சண்டைப் போட்டது நாங்க பார்த்தது இல்லை. ரொம்ப நல்ல புரிதலோடு இருந்தாங்க. பெரிய பிரச்சனை இருந்தது மாதிரி எங்களுக்கு தெரியல, அதனால் வெளியில் கூறப்படும் காரணங்களை முழுமையாக நம்ப முடியாது. அதே நேரம் சுபாஷினி மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.

தனியா இருந்த சமயத்தில் ஏதோ மனசுக்கு பெருசா பாதிப்பு இருந்திருக்கு, அதனால் தான் இந்த மாதிரி முடிவு எடுத்திருப்பாங்க. அந்த நேரத்தில் எங்களுக்கு ஒரு போன் பண்ணியிருந்தா, நாங்க யாராவது போயிருப்போம், பேசிப்பார்த்து அவங்க மனசை மாற்றியிருப்போம், ஆனா அந்த வாய்ப்பே கிடைக்கல. இந்த சம்பவம் மூலம் ஒன்று சொல்கிறேன், எந்த பிரச்சனை இருந்தாலும் தற்கொலை தீர்வு கிடையாது, யாரும் இப்படியான முடிவை எடுக்கக்கூடாது என்று கண்கலங்கியபடி பேசியிருக்கிறார் அபிநவ்யா